பிரான்ஸ் பாரா ஒலிம்பிக் போட்டிகள் கண்கவர் நிகழ்ச்சியில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பங்கேற்பு

0 577

பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான நிகழ்ச்சிகள் மற்றும் வாண வேடிக்கைகளுடன் நிறைவுபெற்றது. அடுத்த பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகர மேயர் கரேன் பாஸிடம் பாரா ஒலிம்பிக் கொடி ஒப்படைக்கப்பட்டது.

பின்னர், பிரான்ஸ் நாட்டின் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் ஜோதியை வாயால் ஊதி அணைத்தனர். நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஆண்ட்ரூ பார்சன்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெற்ற பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில் பல உலக சாதனைகளும், பாரா ஒலிம்பிக் சாதனைகளும் படைக்கப்பட்டன.

சீனா 94 தங்கம், 76 வெள்ளி, 50 வெண்கலம் என மொத்தம் 220 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. பிரிட்டன் இரண்டாவது இடமும், அமெரிக்கா மூன்றாவது இடமும் பிடித்தன.

முன் எப்போதும் இல்லாத வகையில், இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களை வென்று பட்டியலில் 16-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தது.

அடுத்த பாரா ஒலிம்பிக் போட்டிகள், 2028-ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஆகஸ்ட் 15 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments