செங்கடலில் 3 வாரங்களாகத் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல் - 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கடலில் கசியும் அபாயம்

0 655

செங்கடலில், 3 வாரங்களாக தீப்பிற்றி எரிந்துவரும் சரக்கு கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்தால் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உடன், இஸ்ரேல் துறைமுகம் நோக்கி சென்ற கிரேக்க சரக்கு கப்பல் மீது கடந்த 21-ஆம் தேதி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

வரலாற்றில் மிகப்பெரிய எண்ணெய் கசிவு நேர்வதை தடுக்க, ஐரோப்பிய கடற்படை பாதுகாப்புடன், இழுவை படகுகள் மூலம் சரக்கு கப்பலை அப்புறப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றன.

அவை மீதும் தாக்குதல் தொடுக்கப்படலாம் என அமெரிக்கா எச்சரித்திருந்த நிலையில், இழுவை படகுகளை தாக்கப்போவதில்லை என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments