இந்தியா நினைத்தால் உக்ரைன் போரை நிறுத்த முடியும் - இத்தாலி பிரதமர்
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும் என இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தெரிவித்தார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவும் சீனாவும் நினைத்தால் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று தெரிவித்தார்.
உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும், இந்தியா, பிரேசில், சீனா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்யலாம் என்றும் ரஷ்ய அதிபர் புதின் அறிவித்த நிலையில், மெலோனி இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்யாவுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Comments