நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாட்டம்

0 803

முழு முதற்கடவுள்... வினைதீர்ப்பவர்... விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வளர்பிறை நான்காம் நாளான சதுர்த்தியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

இந்த நன்னாளில் வீடுகள் தோறும் மாவிலைத் தோரணங்கள் கட்டி, இலையில் புத்தரிசிப் பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் அலங்கரிக்கின்றனர்.

முக்கனிகளுடன் ஆப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல்,பொரி மற்றும் பழங்களைப் படையலிட்டு வழிபடுகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி நாளில் உணவு எதுவும் எடுக்காமல் விரதமிருந்து வழிபடுவோரும் உண்டு.

விநாயகர் கோயில்களில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில், மதுரை முக்குருணி விநாயகர், புதுச்சேரி மணக்குள விநாயகர், சேலம் ராஜகணபதி உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

பலதரப்பட்ட மக்களும், கலாச்சாரம் கொண்ட இந்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்துத் தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் திருநாள்தான் விநாயகர் சதுர்த்தி என்பது தனிச்சிறப்பு...

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments