பெண்ணுக்கு லிஃப்ட் கொடுத்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது..!
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே வேலை முடிந்து வந்த பெண்ணுக்கு இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுத்து அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராயந்தூர் பகுதியை சேர்ந்த பிரவீன் தனக்கு அறிமுகமான 45 வயது பெண்ணை வீட்டில் விடுவதாக கூறி அழைத்துச் சென்று தனது நண்பர் ராஜ்கபூர் என்பவருடன் சேர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததையடுத்து, கைது செய்ய சென்ற போது தப்பி ஓட முயற்சித்து கீழே விழுந்த ராஜ்கபூருக்கு இடது கையிலும், பிரவீனுக்கு இடது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Comments