அமெரிக்கா போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் நாளை பூமிக்குத் திரும்பும்: நாசா
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மட்டும், வானிலையைப் பொறுத்து நாளை பூமிக்குத் திரும்பும் என நாசா தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோருடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு தனது முதல் பயணத்தை ஸ்டார்லைனர் மேற்கொண்டது.
8 நாள் ஆய்வுக்குப் பிறகு இருவரும் பூமிக்குத் திரும்ப இருந்த நிலையில், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் அவர்களது பயணம் நிறுத்திவைக்கப்பட்டது. பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு, வீரர்களுடன் பயணம் மேற்கொள்ள விண்கலம் பாதுகாப்பானது இல்லை எனத் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரும் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள் என நாசா அறிவித்தது.
Comments