தெலுங்குதேசம் எம்.எல்.ஏ மீது கட்சி பெண் நிர்வாகி வீடியோ ஆதாரத்துடன் பாலியல் புகார்

0 764

ஆந்திராவில் ஆளும்கட்சியான தெலுங்குதேசம் எம்.எல்.ஏவுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ ஆதாரத்துடன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் பேட்டியளித்த அந்த பெண், சத்தியவேடு தொகுதி எம்.எல்.ஏவான ஆதிமூலம் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்த போது இருவருக்கும் இடையே அரசியல் ரீதியான மோதல் இருந்ததாக தெரிவித்தார்.

ஆதிமூலம் கட்சி மாறி வந்த பிறகு தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்து தன்னை திருப்பதியில் உள்ள ஹோட்டலுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments