ஜெர்மனில் இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் சுட்டுக் கொலை

0 521

ஜெர்மனின் கரோலினென்பிளாட்ஸ் நகரில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகம் மற்றும் நாஜி அருங்காட்சியகம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய ஆஸ்திரிய இளைஞரை போலீஸார் பதில் தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றனர்.

காரிலிருந்து கையில் துப்பாக்கியோடு இறங்கிய அந்த நபர் தூதரகம் நோக்கி குறி வைத்த போது பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

1972 ஆம் ஆண்டு முனிச்சில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 11 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை பாலஸ்தீனிய பிளாக் செப்டம்பர் என்ற அமைப்பினர் கொலை செய்ததன் நினைவு நாளில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments