காங்கோவுக்கு 2 லட்சம் குரங்கம்மை தடுப்பூசிகளை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்
குரங்கம்மை பரவலின் ஆரம்பப்புள்ளியாக கருதப்படும் ஆப்ரிக்க நாடான காங்கோவுக்கு, முதல் தவணையாக 99 ஆயிரம் தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றியம் நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்தாண்டு காங்கோவில், குரங்கம்மையால் சுமார் 5,000 பேர் பாதிக்கப்பட்டு, அவர்களில் 655 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், காங்கோவுக்கு 2 லட்சம் தடுப்பூசிகளை வழங்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
மக்கள் மத்தியில் தடுப்பூசிகள் குறித்து அச்சம் நிலவுவதால் அடுத்த ஒரு மாதத்துக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும், அதன் பிறகு தடுப்பூசி செலுத்த உள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
Comments