சென்னையில் ஒலி மாசு ஏற்படுவதைத் தடுக்க சிக்னல்களில் டெசிபல் மீட்டர்கள்.. ஒலி மாசு அதிகமானால் கிரீன் சிக்னல் விழாது..!
சென்னை மாநகரில் Noise Pollution எனப்படும் ஒலி மாசு ஏற்படுவதைத் தடுக்க, மும்பையில் உள்ளதைப்போல் போக்குவரத்து சிக்னல்களில் ஒலியை அளவிடும் டெசிபல் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன.
சிக்னலில் வாகன ஓட்டிகள் தொடர்ந்து ஹாரன் அடித்துக்கொண்டே இருந்து, அதன் சத்தம் அனுமதிக்கப்பட்ட ஒலி மாசு அளவைத் தாண்டினால், சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்துகொண்டே இருக்கும். கிரீன் சிக்னல் விழுவது தாமதம் ஆகும். இதனால், வாகன ஓட்டிகள் ஹாங்கிங் எனப்படும் தொடர்ந்து ஹாரன் அடிப்பது குறைந்து, ஒலி மாசு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
இது தொடர்பாக சென்னையில் ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. சென்னையைத் தொடர்ந்து மதுரை, கோவை, திருச்சி நகரங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலி மாசு அதிகம் உள்ள சிக்னல்களில் பணியில் உள்ள போக்குவரத்துக் காவலர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க, அவர்களுக்கு இயர் பிளக் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments