தமிழக அரசு சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் 153வது பிறந்த நாள் கொண்டாட்டம்

0 478

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்ததினத்தையொட்டி சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்ட உருவ படத்திற்கு அமைச்சர்கள் சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ.உ.சி.யின் சிலைக்கு அமைச்சர் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

திருநெல்வேலி டவுனில் மாநாகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள வ.உ.சியின் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments