மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் காய்ச்சல் ஏற்பட்டு 79 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
20 படுக்கைகளுடன் கூடிய டெங்கு சிகிசிச்சை சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளதாகவும், டெங்கு பாதித்த இருவரின் உடல்நிலையையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை பொறுப்பு முதல்வர் செல்வராணி தெரிவித்துள்ளார்.
Comments