திரை பிரபலங்கள் கைகளால் விருது வழங்குவதாக கூறி வசூல் வேட்டை.. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், விருது வாங்க வந்தோர் இடையே வாக்குவாதம்..

0 536

பல்லடம் அருகே, கடந்த ஞாயிற்றுகிழமை நடிகர்கள் பாக்கியராஜ், சதீஷ், பாலா ஆகியோர் கலந்துகொண்ட விருது வழங்கும் விழாவில் நடந்த குளறுபடிகளால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், விருது வாங்க வந்தோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திரை நட்சத்திரங்கள் கைகளால் விருது வழங்குவதாக கூறி, சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், யூடியூபர்களிடமிருந்து 2000 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எவ்வித திட்டமிடலும் இல்லாமல் விழா நடத்தப்பட்டதால் திரை பிரபலங்கள் பாதியிலேயே கிளம்பிய நிலையில், விருதுகளை மேடையில் கொட்டி வைத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே அவற்றை வழங்கியதாக சொல்லப்படுகிறது.

திரைப்பிரபலங்கள் கையால் விருது வாங்கலாம் என எதிர்பார்த்து பணம் செலுத்தி ஏமாந்துபோனதாக விருது வாங்க வந்தோர் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments