“கோட் டிக்கெட் வேணுமா”.. 4 ஆயிரம் ரூபாய் கொடு.. இது என்ன புது கொள்ளை ? கும்பகோணம் ரசிகர்கள் தாராளம்
கும்பகோணத்தில் கோட் படத்திற்கான டிக்கெட்டுக்களை விஜய் ரசிகர்கள் இலவசமாக வழங்கிய நிலையில், புதுச்சேரியில் ஒரு டிக்கெட் 4 ஆயிரம் ரூபாய் வரை பேரம் பேசி விற்கப்படுவதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்
விஜய் நடிப்பில் வெளியாக உள்ள கோட் படம் தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் நாளை வெளியாகிறது.
தமிழ் திரையுலகில் முதன் முறையாக அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் என்ற பெருமையை பெற்றுள்ள கோட் படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் அலைபாய்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வயிறார சாப்பாடும் கொடுத்து... கையில் கோட் படத்தின் சிறப்புக் காட்சிக்காண டிக்கெட்டும் இலவசமாக கொடுத்து.. தாராள மனதை காட்டியுள்ளனர் கும்பகோணம் விஜய் ரசிகர்கள்..!
விஜய்யின் கோட் படத்திற்காண டிக்கெட் ப்ரீயாக கிடைக்கிறது என்றதும் பெண்கள் போட்டிபோட்டுக் கொண்டு மகிழ்ச்சியுடன் அதனை பெற்றுச்சென்றனர்
அதே நேரத்தில் புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் டிக்கெட் விற்று விட்டதாக செயற்கை தட்டுப்பாடை உருவாக்கி ஒரு டிக்கெட் ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை காட்சிக்கு தகுந்தாற் போல பேரம் பேசி விறபதால் சாமானிய ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் தவித்து வருவதாக ஆதங்கம் தெரிவித்துள்ளனர்
இது ஒரு புறம் இருக்க கோட் படத்திற்கான டிக்கெட் அனைத்தையும் பிளாக்கில் பெற்று கையில் வைத்திருக்கும் சிலர் வாட்ஸ் ஆப் குழு தொடங்கி அதில் தங்களிடம் இருக்கும் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.
Comments