வடகொரியாவில் 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை: அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவு
வடகொரியாவில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளை தடுக்கத் தவறியதாக சுமார் 30 அரசு அதிகாரிகள் தூக்கிலிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாகாங் மாகாணத்தில் பெய்த கனமழையால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. பலர் காயமடைந்த நிலையில், அதிகமானவர்கள் வீடுகளை இழந்தனர்.
மழை, வெள்ள பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து அதிபர் கிம் ஜோங் உன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பாதிப்புகளைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
Comments