வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத அனுமதிப்பதாக புகார்.. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை..!
வகுப்புக்கே வராத மாணவர்களை செமஸ்டர் தேர்வெழுத அனுமதித்தால் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுமென பி.எட் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்த புகாரில், வெளிமாநிலம் ஒன்றில் இயங்கும் குளோபல் அகாடமி என்கின்ற நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments