ஆன்லைன் சூதாட்டத்தில் ரொக்கத்தை இழந்த கணவன் - மனைவி தற்கொலை

0 878
ஆன்லைன் சூதாட்டத்தில் ரொக்கத்தை இழந்த கணவன் - மனைவி தற்கொலை

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையில் தனது 30 சவரன் நகைகளை விற்ற பணத்தையும், கடனாகப்பெற்ற 10 லட்சம் ரூபாயையும் ஆன்லைன் ரம்மியில் கணவர் இழந்ததால் மன உளைச்சலில் மனைவி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் முத்துப்பாண்டி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக ஓராண்டு முன்பே அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விரக்தியில் இருந்த மனைவி மனோன்மணி கடந்த 5 நாட்களுக்கு முன்பு எலி பேஸ்ட் சாப்பிட்டதாகவும்,  சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று உயிரிழந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்த தென்கரை போலீசார், மனைவியின் விபரீத முடிவுக்கு காரணமான கணவர் முத்துப்பாண்டியை தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments