போட்டிபோட்டுக்கொண்டு சென்ற டிப்பர் லாரி மோதி பைக்கில் சென்றவர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்

0 573
போட்டிபோட்டுக்கொண்டு சென்ற டிப்பர் லாரி மோதி பைக்கில் சென்றவர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே சவுடு மண் குவாரியில் சவுடு மணல் ஏற்றச்சென்ற ஒரு டிப்பர் லாரியை மற்றொரு டிப்பர் லாரி, போட்டிப் போட்டுக்கொண்டு வளைவில் முந்தியபோது முன்னே சென்ற பைக் மீது மோதியதில், அதில் சென்றவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

சுகுமார் என்பவர் தண்டலம் பகுதியில் இருந்து பட்டரை வாக்கம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்ற போது,  வெள்ளகுளம் பகுதியில் டிப்பர் லாரி மோதியது. தகவல் அறிந்து திரண்ட அப்பகுதியினர் டிப்பர் லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சாலை மறியலில் ஈடுபட்டதுடன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments