அரக்கோணம் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம்

0 496

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 2 பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

சிதம்பரத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் திருப்பதிக்கு சென்றுவிட்டு அரக்கோணம் வழியாக வீடு திரும்பியபோது விண்டர்பேட்டை மேம்பாலத்தின் மீது சென்றுக்கொண்டிருந்த தனியார் தொழிற்சாலை பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது.

கார் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் பேருந்து மீது மோதியதாக போலீசார் தெரிவித்தனர். காரில் குடும்பத்துடன் சுற்றுலா செல்பவர்கள் ஓட்டுநருக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும் என்றும், அவ்வப்போது காரை இடைநிறுத்தி ஓட்டுநர் தூக்க கலத்தில் வாகனத்தை இயக்குவதை தவிர்க்கவேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments