ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழையால் பலியானோரின் எண்ணிக்கை 33ஆக உயர்வு
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ளத்துக்குப் பலியானோரின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது. ஆந்திராவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சாலைகள், ரயில் பாதைகளில் சேதமடைந்து போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
11 மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கிக் கிடக்கின்றன. விஜயவாடாவின் பல்வேறு பகுதிகளில் கிருஷ்ணா நதி நீர் உள்ளே புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்ததால், அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டு வருகின்றனர்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.
Comments