ரஷ்ய உளவாளி என்று கூறப்படும் பெலுகா திமிங்கலம் உயிரிழப்பு

0 760

ரஷ்யாவின் உளவாளி என்று அழைக்கப்படும் பெலுகா வகை வெள்ளை இன  ஹவால்டிமிர் திமிங்கிலம் ஒன்று தென் நார்வே கடல் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 14-அடி நீளமும் 1,224 கிலோ எடையும் கொண்ட இந்த ஹவால்டிமிர் திமிங்கலம் ரஷ்ய எல்லையிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் சிக்கியதாகவும், அப்போது அதன் உடலில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சிட்டி என்று பொறிக்கப்பட்ட கேமராவுடன் கூடிய சில கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததாக நார்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுவாக பெலுகா வகை திமிங்கலங்கள் மக்கள் நடமாட்டமே இல்லாத கடற்கரைகளில் மட்டுமே வசிக்கும் என்ற நிலையில் நார்வேயில் சிக்கிய ஹவால்டிமிர் திமிங்கலம் மீனவர்களுடன் மிகச் சகஜமாக பழகியதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments