நாமக்கல்லில் தவறான உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்ற தாய் கைது

0 740

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தனது தவறான உறவுக்கு இடையூறாக இருந்த 4 வயது பெண் குழந்தையை பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார்.

சேந்தமங்கலம் காந்திபுரத்தைச் சேர்ந்த சினேகா என்ற பெண்ணுக்குத் திருமணமாகி 4 வயதில் மகள் இருந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த சரத்குமார் என்பவனுடன் தவறான தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

விஷயம் கணவருக்குத் தெரியவந்து காவல் நிலையம் வரை பஞ்சாயத்து சென்றதால் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிய சினேகா, சேலூர் செல்லப்பம்பாளையத்தைச் சேர்ந்த தனது உறவினரான கோகிலா என்பவரின் ஆலோசனைப்படி குழந்தையை அங்குள்ள கிணற்றில் வீசியதாகக் கூறப்படுகிறது.

அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சென்ற போலீசார், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, இருவரையும் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments