ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை.. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா, குண்டூர், மங்கலகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்தும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோன்று தெலங்கானா மாநிலத்தின் கம்மம், சூர்யாபேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் இருமாநிலங்களிலும் இன்றும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதையடுத்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களில் தங்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Comments