செப்டம்பரில் ஒவ்வொரு வாரமும் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்? - இந்திய வானிலை ஆய்வு மையம் இயக்குநர் தகவல்
செப்டம்பர் மாதத்தின் ஒவ்வொரு வாரமும் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்தார்.
செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பைவிட அதிகமான மழை பெய்யும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் சில பகுதிகளில் மிக அதிக மழை மற்றும் வெள்ள அபாயம் ஏற்படும் என்றும், வடமேற்கு, தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இயல்பைவிட குறைவான மழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் நிலச்சரிவுகள், மண் சரிவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments