பாரா ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் சாதனை மேல் சாதனை படைத்த பெண்கள்..

0 2377

பாரீஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தடகளப் போட்டிகளில் உலக சாதனையும், பாரா ஒலிம்பிக் சாதனையும் படைக்கப்பட்டன.

பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் T54 பந்தயத்தில், சுவிட்சர்லாந்தின் காத்தரின், பந்தய தூரத்தை 10 நிமிடம் 43.61 விநாடிகளில் கடந்து பாரா ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

பெண்கள் நீளம் தாண்டும் போட்டியில், நெதர்லாந்தை சேர்ந்த ஃப்ளூயர் ஜோங், 6.53 மீட்டர் தாண்டி பாரா ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார்.

பெண்கள் ஈட்டி எறிதல் போட்டியில், 47.06 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து சீனாவின் ஷாவோ யுபிங் தனது உலக சாதனையை முறியடித்து புதிய சாதனையுடன் தங்கம் வென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments