கோவையில் ரூ.15 கோடி மோசடி செய்த நிதி நிறுவன அதிபர்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
கோவையில் காந்திபுரம் பகுதியில் அதிக வட்டி கொடுப்பதாக முதலீட்டாளர்களை ஏமாற்றிய நிதி நிறுவன உரிமையாளர் குறிஞ்சிநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 கோடியே 91 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
முல்லை குழும நிதி நிறுவனம் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறியதை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்து ஏமாந்த நிலையில், இது குறித்து விசாரித்த போலீசார் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி செந்தில்குமார் , 4 பணியாளர்களை விடுவித்தும், அபராத தொகையை பாதிக்கப்பட்ட 387 முதலீட்டாளர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரித்து கொடுக்கவும் உத்தரவிட்டார்.
Comments