"செட் தேர்விற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாக வாய்ப்பு"..!
தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான செட் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என அத்தேர்வை நடத்தும் பொறுப்பை பெற்றுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்திரசேகர் கூறியுள்ளார்.
செட் தேர்வெழுத 97 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் ஆன்லைன் தேர்வு என்பதால் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு வருவதாகவும் பல்கலைகழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்குப் பின் அவர் தெரிவித்துள்ளார்.
Comments