பிளாஸ்டிக் மறுசுழற்சி முறையில் ஆடை தயாரித்திருக்கும் MCR நிறுவனம்..!

0 286

தமிழ்நாட்டில் முதல் முறையாக பிளாஸ்டிக் பாட்டில்களை,மறுசுழற்சி முறையில் பருத்தியுடன் சேர்த்து நூலாக மாற்றி, புதிய ஆடைகளை வடிவமைத்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது MCR நிறுவனம்.

சென்னை தரமணியில் நடந்த நிகழ்ச்சியில், MCR நிறுவனம் தயாரிக்கும் விதவிதமான வேட்டி, சட்டைகள், டி-சர்ட்டுகள் உள்ளிட்ட ஆடைகள் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பயன்படுத்தப்பட்ட பின்னர் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் MCR நிறுவனம் அதனை சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக்கி சிறு சிறு மணிகளாக மறுசுழற்சி செய்யப்படுகிறது.

பின்னர் இதனை பஞ்சாக மாற்றி 70:30 என்ற விகிதத்தில் பருத்தி உடன் சேர்த்து நூலக மாற்றப்படுகிறது. இந்த நூலினை கொண்டு வழக்கமான ஆடைகள் தயாரிப்பது போல வெள்ளை சட்டைகள், விதவிதமான வண்ண சட்டைகள் மற்றும் டி-சர்ட்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் பருத்தி கலந்திருப்பதால், உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என MCR நிறுவனத்தின் தலைவர் ராபின் ரிக்ஸன் பாபு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments