தூத்துக்குடியில் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்த பார்வை மாற்றுத்திறனாளியை அலைக்கழிக்கும் அதிகாரிகள்

0 379

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பார்வை மாற்றுத் திறனாளி சென்றாயப் பெருமாள் என்பவர் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்தபோது, உயிரோடு இருக்கும் அவரது தந்தை இறந்துவிட்டதாகக் கூறி, பட்டா வழங்க மறுத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தனது தந்தை ஜெயராஜ் இறந்துவிட்டதாகவும் எனவே அவருக்குச் சொந்தமான 36.66 சதுர மீட்டர் இடம் தனக்கு சேரும் என்பதால் பட்டா கொடுக்க அதிகாரிகள் மறுப்பதாகவும் சென்றாயப் பெருமாள் கூறினார். இதுகுறித்து மஞ்ச நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷிடம் கேட்டபோது, அலுவலகத்தில் தட்டச்சு செய்யும்போது, ஜெயராஜ் இறந்துவிட்டதாக தவறாக பதிவாகி இருக்கலாம் என பதிலளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments