திருச்சி என்.ஐ.டி. கல்லூரி மாணவர்கள் விடிய விடிய நடத்திய போராட்டம் வாபஸ்

0 470

திருச்சி என்ஐடி கல்லூரியில் பாலியல் தொந்தரவுக்குள்ளான மாணவியின் ஆடை குறித்து தரக்குறைவாக பேசிய விடுதி வார்டன் உள்ளிட்ட 3 பேரை கண்டித்து மாணவ, மாணவிகள், விடிய, விடிய போராட்டம் நடத்தினர்.

போலீசார் முன்னிலையில் வார்டன் உள்ளிட்ட மூவரும் மன்னிப்பு கோரியதை அடுத்து மாணாக்கர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. திருச்சி துவாக்குடி என்ஐடி கல்லூரியின் ஓபெல் விடுதிக்கு நேற்று பிற்பகலில் வைஃபை இணைப்பு கொடுக்க வந்து மாணவியிடம் அத்துமீறியதாக கூறப்பட்ட புகாரில், ஒப்பந்த ஊழியரான கதிரேசன் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் விடுதி வார்டனாக உள்ள உதவி பேராசிரியை ஷமீதா பேகம், ஊழியர்கள் பேபி மற்றும் மகேஸ்வரி ஆகியோர் சம்பந்தப்பட்ட மாணவியின் ஆடை குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மூவரும் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி நேற்றிரவு 11.30 மணி முதல் காலை 9.45 மணி வரையில் மாணாக்கர்கள் போராட்டம் நடத்தினர்.தொடங்கி வைக்கிறார்

இந்நிலையில், மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய திருச்சி எஸ்.பி. வருண்குமார், விடுதி வார்டன் குறித்து மாணவர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பெண் போலீசார் மூலம் மாணவிகளிடம் குறைகள் கேட்கப்பட்டு வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வருண்குமார் உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments