தெலங்கானாவில் திருமண விருந்தில் மட்டன் பீஸ்காக நடந்த மோதலில் 8 பேர் படுகாயம்
தெலங்கானா மாநிலம் நவிப்பேட்டையில், மணமகள் தரப்பில் அளிக்கப்பட்ட திருமண விருந்தில் அதிகளவு மட்டன் பீஸ் இல்லை எனக்கூறி மணமகன் தரப்பினர் வாக்குவாதம் செய்தனர்.
ஒரு கட்டத்தில் சண்டை மோதலாக மாறி இரு தரப்பினரும் கட்டைகள், கற்கள் ஆகியவற்றால் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
இதில், படுகாயம் அடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அங்கு சென்ற போலீசார் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments