அமெரிக்கா குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படும் - கமலா ஹாரிஸ்

0 470

அமெரிக்க அதிபராகத் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், தமது அமைச்சரவையில் குடியரசுத் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு இடம் அளிக்கப்படும் என துணை அதிபரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

ஜார்ஜியாவில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், அனைத்து அமெரிக்கர்களுக்குமான அதிபராகப் பணியாற்றுவேன் என அவர் உறுதி அளித்தார். அமைச்சரவையில் குடியரசுத் கட்சியைச் சேர்ந்தவர் இருந்தால், அது மக்களுக்கு நன்மை அளிப்பதாக அமையும் என அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாற்றுப் பார்வையும் வெவ்வேறு அனுபவங்களையும் கொண்ட ஒருவர் உடன் இருப்பது மிகவும் முக்கியம் எனக் கருதுவதாக அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments