குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழைக்கு 28 பேர் உயிரிழப்பு
குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் ஜாம்நகர், துவாரகா, அகமதாபாத், சூரத் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இடைவிடாத மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. கனமழையால் வீடுகள் இடிந்தும், வெள்ள நீரில் மூழ்கியும் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து சுமார் 18,000 பேர் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஹெலிகாப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.
கனமழை வெள்ளம் காரணமாக வதோதராவில் வீட்டுக்குள் 15 அடி நீள முதலை புகுந்தது. அதேபோல், மழை நீர் சூழ்ந்த வீடு ஒன்றின் மேற்கூரை மீது முதலை தஞ்சமடைந்தது.
Comments