மூத்த குடிமக்களுக்கான இலவச ஆன்மீகப் பயணம் - இந்து சமய அறநிலையத் துறை

0 1288

புரட்டாசி மாதத்தில், தமிழகத்தில் உள்ள வைணவத் தலங்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா நான்கு கட்ட ஆன்மீகப் பயணம், செப்டம்பர் 21, 28, அக்டோபர் 5, 12 ஆகிய தேதிகளில் தொடங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் தொடங்கும் இந்தப் பயணத்தில் 1000 பேர் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். 60 முதல் 70 வயது வரை உள்ள இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் பயணத்தில் கலந்துகொள்ளலாம்.

விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ பெற்றுக்கொள்ளலாம் என்றும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்டம்பர் 19-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments