ஸ்கூட்டிகளை மட்டுமே குறி வைத்து திருடுவது ஏன்..? போலீசிடம் திருடன் சொன்ன பதில்
சென்னை தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் பொது இடங்களில் பார்க்கிங் இல்லாத பகுதியில் நிறுத்தப்படும் ஸ்கூட்டிகளை மட்டுமே திருடிய ஹரிஹரன் என்பவரை சிசிடிவி பதிவை வைத்து கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 14 ஸ்கூட்டிகளை பறிமுதல் செய்தனர்.
கியர் பைக் ஓட்டத் தெரியாததால் ஸ்கூட்டிகளை மட்டுமே திருடியதாக போலீசாரிடம் தெரிவித்த ஹரிஹரன், பூட்டப்பட்ட ஸ்கூட்டிகளை திறந்து ஓட்டி சென்றது எப்படி என்பதை செய்து காண்பித்தார்.
Comments