ஓவர் .. ஓவர்.. இது ரொம்ப ஓவர்.... செல்போன் டவர் இல்லாததால் புளியமரத்தில் ஏறி பேசும் மக்கள்..! திண்டுக்கல்லில் தவிக்கும் 10 கிராமங்கள்

0 604

திண்டுக்கல் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிம்கார்டு நிறுவனங்கள் முறையாக டவர் வசதி செய்து கொடுக்காததால், அவசரத்துக்கு வெளியில் உள்ளவர்களை தொடர்புகொள்ள இயலாமல் அவதியுறும் மக்கள், புளியமரத்தின் மீது ஏறி செல்போனில் பேசி வருவதாக தெரிவித்துள்ளனர்.3

மரத்தில் ஏறி புளியம்பழம் உலுப்ப போகிறாரோ என்று நினைத்து விடாதீர்கள்.. எல்லாம் செல்போனில் பேசுவதற்காகத்தான் இந்த பகீரதபிரயத்னம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட சாணார்பட்டிஒன்றியத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் உள்ளனர்.

இந்த பகுதியில் எந்த ஒரு தொலை தொடர்பு நிறுவனமும் டவர் அமைக்காததால் இங்குள்ள பொதுமக்கள் அலைபேசியை பயன்படுத்த சிக்னல் கிடைக்காமல் தனித் தீவு போல் வாழ்வதாக குற்றஞ்சாட்டுகின்றனர்

அவசரத்துக்கு செல்போன் பேசும் வசதி கூட இல்லை என்று இங்குள்ள ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண் கொடுக்க கூட வெளியூர் ஆட்கள் தயங்குவதாகவும் இங்கு உள்ள மக்கள் கூறுகின்றனர்.

புளிய மரத்தின் உச்சியில் ஏறினால் செல்போனுக்கு சிக்னல் கிடைப்பதால் பெரும்பாலான ஆண்கள் மரத்தில் ஏறி நின்று பேசி வருகின்றனர். இணைய வசதியை பயன்படுத்த முடியாமலும், அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை கூட அழைக்க முடியவில்லை என தெரிவிக்கின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments