கனடா வரலாற்றில் மோசமான காட்டுத்தீ.. கடந்தாண்டு காட்டுத்தீயால் 3.70 கோடி ஏக்கர் காடுகள் நாசம்
கனடாவில் கடந்தாண்டு ஏற்பட்ட காட்டுத்தீ, 3 கோடியே 70 லட்சம் ஏக்கர் காடுகளை கபளீகரம் செய்ததாகவும், இது அந்நாட்டின் மொத்த வனபரப்பில் 4 சதவீதம் எனவும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கனடா வரலாற்றில் மோசமான காட்டுத்தியாக இது கருதப்படும் நிலையில், இதனால் 65 கோடி டன் கார்பன் வளிமண்டலத்தில் கலந்ததாகவும், ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் ஓராண்டு முழுவதும் வெளியிட்ட கார்பனை விட இது அதிகம் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் கடந்தாண்டு வழக்கத்தைவிட அதிக வெப்பம் பதிவான நிலையில், புவி வெப்பமயமாதலால், அடுத்த 25 ஆண்டுகளில் இதே வெப்பம் இயல்பு நிலையாகிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments