தமிழகத்தில் கிட்னிக்காக 7091 பேர் வெயிட்டிங்.. உணவு பழக்கத்தை மாற்றுங்க..! உடலும் உயிரும் முக்கியம் மக்களே
உடல் உறுப்புதானத்தை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் 7,091 பேர் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
ஓர் உயிர் மண்ணில் மறைந்தாலும், பல உயிர்கள் மண்ணில் வாழ்வதற்கு உடல் உறுப்பு தானம் அவசியம் என்பதை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக அரசின் சுகாதாரத்துறை உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தி வருகிறது.
அந்த வகையில், உயிரிழந்த ஒருவர் அளிப்பது ஒரே ஒரு உடல் உறுப்பாக இருந்தாலும், மற்றொருவர் பெறுவதோ உயிர் என சுட்டிக்காட்டுகிறார் உடல் உறுப்பு ஆணைய உறுப்பினர் செயலாளர் கோபாலகிருஷ்ணன்,
கஷ்ட துயரமான சூழலாக இருந்தாலும், உயிரை பறிக்கொடுத்த உறவினர்களும், மூளைச்சாவு அடைந்தவரின் குடும்பத்தினரும் உறுப்புகளை தாமாக முன்வந்து தானமாக கொடுக்கும் அளவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பதாக கூறிகிறார் கோபாலகிருஷ்ணன்
அந்தவகையில் கடந்த 2021-ல் 60 கொடையாளிகள் அளித்த உடல் உறுப்புகளால் 421 பேர்கள் பயன் அடைந்ததாகவும், 2022-ல் 156 கொடையாளிகளால், 943 பேர்களும், 2023 ம் ஆண்டில் 178 பேர் அளித்த உறுப்பு தானத்தால் 1000 பேர்களும், 2024 ஆகஸ்ட் வரை 183 கொடையாளிகள் தந்த உடல் உறுப்புகளினால், 1037 பேர் பயனடைந்துள்ளதாக கூறப்படுகின்றது .
அதே நேரத்தில் சிறுநீரகம் வேண்டி 7091 பேரும், கல்லீரலுக்காக 418 பேரும், இருதயம் வேண்டி 78 பேரும் , இருதயம் மற்றும் நுரையீரல் வேண்டி 22 பேரும் கைகள் வேண்டி 22 பேரும் பதிவு செய்து காத்திருப்பதாக கூறப்படுகின்றது.
நாகரீகம் என்ற பெயரில், மது மற்றும் புகையிலை, உடலை கெடுக்கும் துரித கதி உணவு பழக்கங்களால், நாளுக்கு நாள் மனிதனின் உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுவதாக கூறும் மருத்துவர்கள், இயற்கையை காத்து சத்தான உணவுகளை உட்கொள்வது காலத்தின் கட்டாயம் என்கின்றனர்
Comments