சேலத்தில் தனியார் பேருந்தும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய லாரி ஓட்டுநர்
சேலம், அயோத்தியாபட்டினத்தை அடுத்த தேவாங்கர் காலனி பகுதியில் தனியார் பேருந்தும், ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் இடிபாடுகளில் சிக்கிய லாரி ஓட்டுனர் வேடியப்பன் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறு காயங்களுடன் பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.
அருரில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக சென்ற பேருந்து முன்னாள் சென்ற காரை முந்த முயன்றபோது எதிரே வந்த ஈச்சர் லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது. பயணிகள் 20 பேர் காயமடைந்த நிலையில் தப்பியோடிய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments