சென்னையில் நேற்று ஜீரோ ஆக்ஸிடெண்ட் டே கடைப்பிடிப்பு... எந்த விபத்தும் பதிவாகவில்லை - போக்குவரத்து போலீசார்

0 366

சென்னையில் நேற்று விபத்தில்லா நாள் கடைப்பிடிக்கப்பட்டது. மாநகரில் எந்த விபத்தும் பதிவாகவில்லை என போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஜீரோ ஆக்ஸிடெண்ட் டே கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை அது தொடர்பாக நகரம் முழுவதும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 26-ஆம் தேதி, விபத்து ஏதும் நடைபெறாத வகையில், சாலை விதிகளை மதித்து நடக்கும்படி காவல் துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments