காதலுக்கு மரியாதை செய்ய விஜய் செய்த விபரீத செயல் 5 வது முறையாக கிணற்றில் குதித்தார்..! அழுது அடம் பிடித்த காதலி

0 1171

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கேட்டும், உறவினர்கள் மறுத்ததால், அவர்களை மிரட்டுவதற்காக, அருகில் உள்ள விவசாய கிணற்றில் 4 முறை குதித்து தப்பிய இளைஞர் 5ஆவது முறையாக குதித்தபோது மேலே வர இயலாமல் சிக்கிக்கொண்டார்.

போலீசாரிடம் உரிமைக்குரல் எழுப்பும் இவர் தான் காதலுக்கு மரியாதை செய்ய போன இடத்தில் மனம் கலங்கி கிணற்றுக்குள் குதித்து வசமாய் சிக்கிக் கொண்ட காதல் வீரன் விஜய்..!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள குஞ்சாண்டியூர் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் மகன் விஜய் என்பவர், பாலப்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தார். சம்பவத்தன்று மது போதையில் காதலியின் வீடு தேடிச்சென்ற விஜய், காதலியின் வீட்டாரிடம் தனது காதலியை பெண் கேட்டுள்ளார். அவர்கள் அடித்து விரட்டியதால், காதலியை திருமணம் செய்து கொள்ளலாம் என வற்புறுத்தி அழைத்ததாக கூறப்படுகிறது. அவர் பெற்றோர் பேச்சை மீறி செல்ல மறுத்ததால் ஆத்திரம் அடைந்த விஜய் , உயிரை மாய்த்துக் கொள்வதாக கூறி அருகில் உள்ள விவசாய கிணற்றில் குதித்தார். காதலி கதறி அழுததும் மேலே ஏறி வந்து விட்டார் விஜய்

இப்படியே 4 முறை கிணற்றுக்குள் குதித்து மேலே வந்த விஜய், இனியும் பொறுக்க முடியாது என்று காதலியின் பெயரை அழைத்தபடியே 5 வது முறையாக கிணற்றுக்குள் குதித்த போது வெளியே வர முடியவில்லை, பொறியில் சிக்கிய எலியாக மேலே வர இயலாமல் பக்கவாட்டு சுவற்றில் தவித்த அவரை மீட்க , காவல்துறைக்கும் , தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது

விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் காதலன் விஜய்யை உயிருடன் பத்திரமாக கயிறுகட்டி மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தனது காதலியை சேர்த்து வைக்குமாறு கூறிய விஜய், காதலி மீது வைத்திருக்கும் காதலை சினிமா ஹீரோ போல போலீசாரிடம் விளக்கினார் ..!

போலீசார் காதலன் விஜயை எச்சரித்து ஒழுக்கமாக வீட்டுக்கு செல்ல அறிவுறுத்தினர், தான் போதையில் இருப்பதால் வண்டி ஓட்டினால் டிரங் அண்டு டிரைவ் கேஸ் போடூவீங்கல்ல என்று கூறி செல்ல மறுத்தார்.

போலீசார் “எங்க வண்டியில் ஏறுடா தம்பி” என்று அன்போடு கவனிக்க காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்

அதுவரை பெற்றோர் பேச்சைக்கேட்டுக் கொண்டிருந்த இளம் பெண்ணோ , தான் விஜய்யுடன் தான் செல்வேன் என்று கிளைமேக்ஸில் கதறும் ஹீரோயின் போல அழுது அடம் பிடித்த நிலையில் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச்சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments