போக்குவரத்துத் துறைக்கு 1,796 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது..!
போக்குவரத்துறை மூலம் இதுவரையில் 3,071 புதிய பேருந்துகளுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு, ஆயிரத்து 796 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏற்கனவே வாங்கப்பட்டு கூண்டு கட்டப்பட்டு வரும் பேருந்துகள் நவம்பரில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2,544 பேருந்துகளுக்கும், மாநகர போக்குவரத்து கழகத்திற்கென மேலும் 500 மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
Comments