தேனியில் ஃபிளிப்கார்ட்டில் பரிசு தொகை விழுந்துள்ளதாகக் கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த நபர் கைது
ஃபிளிப்கார்ட்டில் பரிசு தொகை விழுந்துள்ளதாகக் கூறி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அருள்பிரகாஷ் என்பவரிடம் 18 லட்சம் மோசடி செய்த நபரை டெல்லி சென்று சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஃபிளிப்கார்ட் மூலம் செல்போன் கவர் வாங்கிய அருள்பிரகாஷுக்கு 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்துள்ளதாகக் கூறி, லிங்க் ஒன்றை அனுப்பிய மர்ம கும்பல், அதில் மகேந்திரா எஸ்யூவி கார் பரிசாக விழுந்துள்ளதாகவும் அதற்கு 12,800 ரூபாய் பணம் வரியாக செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
அந்த பணத்தை செலுத்தியபிறகு, மீண்டும் மீண்டும் வரி என்ற பெயரில் சுமார் 17 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் வரை பறித்துள்ளனர். தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருள்பிரகாஷ் போலீசில் புகாரளித்துள்ளார். மும்பையைச் சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்குகளை பணம் கொடுத்து வாங்கி, டெல்லியில் போலி கால் செண்டர் நடத்தி பணம் பறித்த ரோகித் குமார் என்பவனை போலீசார் கைது செய்தனர்.
Comments