தாறுமாறாக ஓடிய கார் மோதி 8 பேர் காயம்..பைக் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியதால் நடந்த விபத்து..!

0 499

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனம் மற்றும் நடந்து சென்றவர்கள் மீது மோதி சாலையோரம் இருந்த கீற்று கொட்டகைக்குள் புகுந்தது.

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் தீபநாத் என்பவர் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 8 வயது சிறுமி உள்பட 3 பேருக்கு காலில் எலும்பு முறிந்தது. சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க காரை திடீரென திருப்ப முயன்றதால் விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments