'டெலிகிராம்' நிறுவனர் பாவேல் டுரோவ், பிரான்ஸில் அதிரடி கைது..!

0 478

ரஷ்ய பெருங்கோடீஸ்வரரும், டெலிகிராம் செயலியின் நிறுவனருமான பாவேல் டுரோவ், பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய அரசு விதித்த சமூக வலைத்தள கட்டுப்பாடுகளால், ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து டெலிகிராம் செயலியை அவர் தொடங்கியிருந்தார்.

பணமோசடி, பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த தவறிவிட்டதாக கூறி டுரோவை கைது செய்ய பிரான்ஸில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.  டுரோவ், அஜர்பைஜானில் இருந்து பிரான்ஸுக்கு சொந்த விமானத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments