திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் திடீர் போராட்டம்..!
திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர், பயிற்சி பெண் டாக்டரைத் தாக்கியதால், டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதி மலையில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பங்காரு ராஜு தேவஸ்தான விஜிலன்ஸ் துறை அதிகாரிகள் மூலம் திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேஸ்வரா மெடிக்கல் சைன்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், பயிற்சி டாக்டரை அவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. டாக்டர்களுடன் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி பேச்சு நடத்தியபின், போராட்டம் முடிவுக்கு வந்தது.
Comments