என்னை ஏன் இந்த வழக்கில் இழுத்து போடறீங்கன்னு புரியல..இயக்குனர் நெல்சன் திடீர் ஆதங்கம்..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் வழக்கறிஞர் மொட்டைக்கிருஷ்ணன் உடன் செல்போனில் பேசியதாக இயக்குனர் நெல்சன் மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், போலீசார் தன்னை விசாரிக்கவில்லை என்றும் தனது மனைவி சம்பந்தப்பட்ட வழக்கறிஞரிடம் என்ன பேசினார்? எனத் தெரியாது என்றும் நெல்சன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கோலமாவு கோகிலா .. டாக்டர்.. பீஸ்ட்.. ஜெயிலர் என தனது படங்களில் எல்லாம் ரவுடிகளையும், தாதாக்களையும், கடத்தல்காரர்களையும் நகைச்சுவை கதாபாத்திரங்களாக மாற்றி வெற்றிக் கண்டவர் இயக்குனர் நெல்சன். நிஜத்தில்.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ஒரு வழக்கறிஞருடன் தனது மனைவி பேசியதால் போலீஸ்.. விசாரணை.. என தன்னையும் உள்ளே இழுத்து விட சிலர் முயற்சிப்பதாக நெல்சன் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உடன் கடந்த 7 ந்தேதி தனது மனைவி பேசியதாக தெரிவித்த நெல்சன், அவர் கூட 30 செகண்ட் கூட பேசவில்லை, என்ன பேசினார்ன்னு கூட எனக்கு தெரியாது, என்னையும் இந்த கேஸ்ல இழுத்து விட நினைக்கிறாங்க என்றார்.
இதுவரை போலீசார் தன்னிடம் விசாரிக்கவில்லை என்ற நெல்சன், தனக்கு போலீசார் சம்மன் அளித்திருப்பதாக வெளியான தகவலையு ம் மறுத்தார்.
Comments