போலி பேராசிரியர் நியமன விவகாரத்தில் பொன்முடி எச்சரிக்கை..!
பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்களை போலியாக நியமித்த விவகாரத்தில், யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் தனியார் பள்ளியில் நடைபெற்ற கல்வி மேம்பாட்டுக்கான கருத்தரங்கில் பங்கேற்ற அவர், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே வந்துள்ள போதைப்பழக்கம், இன்று, நேற்று வந்ததல்ல, பல ஆண்டுகளாக உள்ளதாகவும், பள்ளி, கல்லூரிகளின் அருகே போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
Comments