ரஜினிகாந்த் மனம் திறந்து கூறிய அறிவுரையை ஏற்கிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 511

தம்மைவிட ஒரு வயது மூத்தவரான நடிகர் ரஜினிகாந்த் மனம் திறந்து ஊக்கப்படுத்தும் வகையில் கூறிய அறிவுரைகளைப் புரிந்து கொண்டதாகக் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "பயப்பட வேண்டாம் எதிலும் தவறி விடமாட்டேன்" என்கிற உறுதியை ரஜினிக்கு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அமைச்சர் எ.வ.வேலு எழுதிய "கலைஞர் எனும் தாய்" நூலை வெளியிட்டுப் பேசிய அவர், இந்திய வரைப்படத்தில் குறிப்பிடப்படாத சிற்றூரில் பிறந்த கலைஞருக்கு இந்திய அரசே நாணயம் வெளியிடுகிறது என்றால் நமக்கெல்லாம் பெருமை எனக் குறிப்பிட்டார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments