கத்திமுனையில் 75 சவரன் கொள்ளையடித்த வழக்கு.. கொள்ளையன் உள்பட 3 பேர் கைது..!
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகே தொழிலதிபர் மோகன்தாஸ் என்பவரின் வீட்டில் கத்திமுனையில் 75 சவரன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்த வழக்கில், விமானத்தில் தப்பிய ஆந்திராவை சேர்ந்த பிரபல கொள்ளையன் மனுகொண்டாவை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 45 சவரன் நகைகளை மீட்டு நடத்திய விசாரணையில், கோவை சிறையில் இருந்தபோது கொள்ளைக்கு திட்டமிட்டதும், விருதுநகரை சேர்ந்த பார்த்திபனுடன் சேர்ந்து கொள்ளையை அரங்கேற்றியதும் தெரியவந்தது. கொள்ளைக்கு உதவிய பார்த்திபன், திருப்பூரைச் சேர்ந்த சுப்பிரமணி இருவரையும் போலீசார் கைது செய்தனர். ரயிலில் அழைத்து வரும்போது, குதித்து தப்ப முயன்றதில் மனுகொண்டாவின் கால் முறிந்ததாக போலீசார் கூறினர்
Comments